கழிவுகள் ஏற்றி வந்த 7 லாரி திருப்பி அனுப்பப்பட்டன


கழிவுகள் ஏற்றி வந்த 7 லாரி திருப்பி அனுப்பப்பட்டன
x
தினத்தந்தி 12 May 2023 12:30 AM IST (Updated: 12 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் இருந்து கழிவுகள் ஏற்றி வந்த 7 லாரி திருப்பி அனுப்பப்பட்டன.

தென்காசி

செங்கோட்டை:

புளியரை சோதனை சாவடியில் போலீசார் வாகனங்களை சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது கேரளாவில் இருந்து வந்த ஒரு லாரியை மறித்து சோதனை செய்தனர். அதில் குப்பை கழிவுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது அடுத்தடுத்து 6 லாரிகள் கழிவுகளை ஏற்றிக் கொண்டுவந்தது. அந்த லாரிகளையும் போலீசார் தடுத்து நிறுத்தி டிரைவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, கொல்லம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட குப்பைகள் லாரியில் இருப்பதாகவும், சிமெண்டு தயாரிப்பதற்காக தாங்கள் எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தனர். ஆனால் இதை போலீசார் ஏற்க மறுத்து, 7 லாரிகளையும் கேரளாவுக்கு திருப்பி அனுப்பினர்.


Next Story