கல்விக்கடன் கேட்டு 7 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம்


கல்விக்கடன் கேட்டு 7 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம்
x
தினத்தந்தி 11 Oct 2023 12:30 AM IST (Updated: 11 Oct 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

கல்வி கடன் கேட்டு 7 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப் பித்து உள்ளதாக கற்பகம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முகாமில் கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்தார்.

கோயம்புத்தூர்

கல்வி கடன் கேட்டு 7 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப் பித்து உள்ளதாக கற்பகம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முகாமில் கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்தார்.


கல்வி கடன் முகாம்


கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை அருகே ஈச்சனாரி கற்பகம் பல்கலைக்கழக வளாகத்தில் கல்வி கடன் முகாம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கி 15 மாணவ-மாணவிகளுக்கு கல்வி கடன் பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-


கோவை மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ-மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்கு மாபெரும் கல்வி கடன் வழங்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி 5-வது முகாம் இங்கு நடைபெறுகிறது. கல்விக்கடன் பற்றிய விவரங்கள் தெரிந்தவர்கள் தான் எளிதாக கடனுதவி பெறுகின்றனர்.


ஆனால் வசதி இல்லாதவர்கள், அரசுப் பள்ளிகளில் பயின்றவர் கள், தேவையான சான்றிதழ்கள் பெற எந்த துறையை அணுக வேண்டும் என்ற விவரங்கள் தெரியாமல் கல்விகடன் வாங்க வங்கியை அணுக முடியாதவர்களாக உள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் இந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.


7 ஆயிரம் பேர்


முதல்முறையாக கல்வி கடன் வழங்கும் முகாம் நடைபெற்ற போது சுமார் 50 சதவீத மாணவ-மாணவிகள் பான் கார்டு, முதல் தலைமுறை பட்டதாரி உள்ளிட்ட சான்றிதழ்கள் இல்லா மல் இருந்தனர். ஆனால் இந்த சிறப்பு முகாம்கள் வாயிலாக தேவையான சான்றிதழ் வழங்கப்பட்டதால் தற்போது, 10 சதவீதத் திற்கு குறைவான மாணவ- மாணவிகளே இதுபோன்ற சான்றிதழ் இல்லாமல் முகாமில் கலந்து கொண்டு உள்ளனர்.


அனைத்து விதமான தகுதி சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கும் போது உடனடியாக வங்கிகள் மூலம் கடனுதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன. இந்த 5 கல்விகடன் வழங் கும் முகாம்களில் கல்விக் கடன் கேட்டு மொத்தம் 7 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பம் கொடுத்து உள்ளனர்.


வங்கிகள்


அதன்பிறகு வங்கிகளின் பங்குதான் மிக முக்கியமானதாக இருக்கும். அரசுடன் இணைந்து, தகுதிவாய்ந்த மாணவ-மாணவிகளுக்கு உடனடியாக கல்விக்கடன் வழங்க அனைத்து வங்கிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார்.


முகாமில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கற்பகம் கல்வி நிறுவனங்கள் தலைவர் வசந்தகுமார், கற்பகம் பல்கலைக் கழக துணைவேந்தர் வெங்கடாஜலபதி, இந்தியன் வங்கி கோட்ட மேலாளர் சாருலதா, வருவாய் கோட்டாட்சியர் (தெற்கு) பண்டரிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story