மூதாட்டியிடம் 7½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு

மூதாட்டியிடம் 7½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு
x

மூதாட்டியிடம் 7½ பவுன் தங்க சங்கிலியை பறித்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி

மூதாட்டியிடம் 7½ பவுன் தங்க சங்கிலியை பறித்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சங்கிலி பறிப்பு

திருச்சி கருமண்டபம் அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் அதே பகுதியில் எண்ணெய் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி செல்லக்கிளி (வயது 61). நேற்று காலையில் செல்லக்கிளி தனது வீட்டின் அருகில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக நடந்து சென்றார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் செல்லக்கிளி கழுத்தில் அணிந்திருந்த 7½ பவுன் தாலி சங்கிலியை பறித்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டார். அதற்குள் மர்ம ஆசாமி அங்கு இருந்து தப்பி சென்றுவிட்டான். இது குறித்த புகாரின் பேரில் திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story