2040க்குள் சென்னையின் 7 சதவீத நிலப்பரப்பு கடலில் மூழ்கும்: சி.எஸ்.டி.இ.பி எச்சரிக்கை


2040க்குள் சென்னையின் 7 சதவீத நிலப்பரப்பு கடலில் மூழ்கும்: சி.எஸ்.டி.இ.பி எச்சரிக்கை
x

சென்னையில் 7 சதவிகிதம் கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

காலநிலை மாற்றம், பனிப்பாறைகள் உருகுதல் போன்றவற்றால் கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால், உலகம் முழுவதும் கடலோர நகரங்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். இந்த நிலையில் , 2040 -ஆம் ஆண்டு வாக்கில் கடல் மட்டம் உயர்ந்து சென்னையின் ஏழு சதவீதம் நிலப்பரப்பு கடலில் மூழ்கும் என்று அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. சென்னை அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா, தீவு திடல், குடியரசு பொன் விழா நினைவு தூண், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் துறைமுகம் உள்ளிட்ட பகுதிகள் கடல் மட்ட உயர்வால் மூழ்கும் அபாயம் உள்ளது என்று சிஎஸ்டிஇபி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே 2050 ஆம் ஆண்டுக்குள் உலகில் உள்ள 570 நகரங்களில் உள்ள சில நிலப்பரப்புகள் கடலில் மூழ்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சென்னைக்கும் அந்த ஆபத்து இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது..1987 முதல் 2021 வரையில் சென்னையில் கடல் மட்டம் 0.679 செ.மீ. உயர்ந்துள்ளதாகவும், வருடாந்திர உயர்வு 0.066 செ.மீ. என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் மும்பையில்தான் அதிகபட்ச கடல் மட்ட உயர்வு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள தொழிற்பேட்டைப் பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தை எதிர்கொள்ள உள்ளது.


Next Story