சர்வதேச புத்தக கண்காட்சிக்கு ரூ.6.60 கோடி நிதி - அரசாணை வெளியீடு


சர்வதேச புத்தக கண்காட்சிக்கு ரூ.6.60 கோடி நிதி - அரசாணை வெளியீடு
x

நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கும் சர்வதேச புத்தக கண்காட்சிக்கு ரூ.6.60 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழுள்ள பொது நூலக இயக்ககம், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் ஆகியவை தென் இந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்துடன் (பபாசி) இணைந்து 16, 17 மற்றும் 18-ந் தேதிகளில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதல் சர்வதேச புத்தக கண்காட்சியை நடத்துகின்றன.

இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், கொரியா, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள் அதில் பங்கேற்கின்றனர். இந்த சர்வதேச புத்தக கண்காட்சிக்கு ரூ.6.60 கோடி நிதியை ஒதுக்கி, பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா அரசாணை வெளியிட்டுள்ளார்.

பபாசி சார்பில் சென்னை புத்தக கண்காட்சி 6-ந் தேதி ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்குகிறது. அங்கு 16-ந் தேதி சர்வதேச புத்தக கண்காட்சி தொடங்குகிறது.


Next Story