பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
கோயம்புத்தூர்
நெகமம்
நெகமத்தை அடுத்த காணியாலாம்பாளையத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் பணம் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் விரைந்து சென்று பணம் வைத்து சூதாடிக்கொண்டு இருந்த அதே பகுதிைய சேர்ந்த கார்த்தி(வயது 46), கோவிந்தனூரை சேர்ந்த பழனிச்சாமி(65), ரங்கராஜ்(53), சேர்வைகாரன்பாளையத்தை சேர்ந்த ராஜகோபால்(53), வடக்கிபாளையத்தை சேர்ந்த முருகன்(37), மாப்பிள்ளைகவுண்டன்புதூரை சேர்ந்த கண்ணப்பன்(49) ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 52 சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.14 ஆயிரத்து 750 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story