பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை
இலுப்பூர் அருகே கோவிந்தநாயக்கன்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-டிவிசன் சிறப்பு போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பஸ் நிறுத்த பகுதியில் சூதாடி கொண்டிருந்த மலைக்குடிப்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 35), மாரிமுத்து (29), செல்வம் (32), ஜெயக்குமார் (26), வடிவேல் (39), தமிழன் (50) ஆகிய 6 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து சூதாட்ட அட்டைகள், ரூ.490 உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story