பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
x
தினத்தந்தி 27 March 2023 12:15 AM IST (Updated: 27 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மங்கலம்பேட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனா்.

கடலூர்

விருத்தாசலம்,

மங்கலம்பேட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எம்.பரூர் பகுதியில் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த சிலர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். உடனே போலீசார் விரைந்து சென்று அவர்களை மடக்கிப்பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் அதேபகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 28), ராமலிங்கம் (65), கோவிந்தசாமி (22), செல்வராசு (48), இலியாஸ் (40), தனசேகர் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து சுரேஷ் உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story