பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

கோயம்புத்தூர்

நெகமம்

நெகமத்தை அடுத்த செட்டிபுதூரில் உள்ள ஒரு குடோனில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு நெகமம் இன்ஸ்பெக்டர் சரவணபெருமாள் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். அப்போது பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்த அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரசாமி(வயது 57), வெங்கடேஷ்(45), வெற்றிவேல்(49), கிருஷ்ணசாமி(74), வெங்கடேசன்(47), தியாகராஜன்(63) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.27 ஆயிரத்து 530 மற்றும் 52 சீட்டு கட்டு பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story