ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த 6 பேர் கைது


ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த 6 பேர் கைது
x

ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

மணமேல்குடி:

மணமேல்குடியை அடுத்த காரக்கோட்டை பாலம் பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக மணமேல்குடி போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா முகம்மது மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த பி.ஆர்.பட்டினம் பகுதியை சேர்ந்த ஜகாங்கீர், நாகூர்கனி, ஜகுபர் சாதிக், நாகராஜன், தௌபிக், நைனா முகம்மது ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ.33 ஆயிரம், 9 செல்போன்கள், 4 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story