தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டில் 579 ஏரிகள் நிரம்பின
சென்னை மாநகரில் ஒருசில இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து வருகிறது.
சென்னை,
`மிக்ஜம்' புயல் காரணமாக சென்னையில் அதி கனமழை பெய்ததால் நகரமே தண்ணீரில் தத்தளிக்கிறது. நகர தெருக்களில் எல்லாம் சூழ்ந்துள்ள மழைநீர் கடந்த 2015-ம் ஆண்டு வெள்ளத்தை நினைவுபடுத்தும் வகையில் இருந்தது. நேற்று முழுவதும் பெய்த மழை, தற்போது ஓய்ந்துள்ளது. மாநகரில் ஒருசில இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து வருகிறது. இதனால் சென்னை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
இந்த நிலையில், தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 579 ஏரிகள் நிரம்பியுள்ளன. நேற்று ஒரே நாளில் 262 ஏரிகள் நிரம்பியுள்ளன. 128 ஏரிகள் 75%-99% நிரம்பியுள்ளன. 126 ஏரிகள் 50%-74% நிரம்பியுள்ளன. 75 ஏரிகள் 25%-49% நிரம்பியுள்ளன. 1 ஏரி 25% குறைவாக நிரம்பியுள்ளது.
Related Tags :
Next Story