திருவொற்றியூர், செட்டித்தோட்டத்தில் ரூ.105 கோடியில் 579 அடுக்குமாடி குடியிருப்பு


திருவொற்றியூர், செட்டித்தோட்டத்தில் ரூ.105 கோடியில் 579 அடுக்குமாடி குடியிருப்பு
x

திருவொற்றியூர், ராயபுரம் தொகுதிகளில் ரூ.105.13 கோடியில் 579 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டினார்.

சென்னை

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் திருவொற்றியூரில் ரூ.59.77 கோடி மதிப்பீட்டில் 336 அடுக்குமாடி குடியிருப்புகளும், செட்டித்தோட்டம் பகுதியில் ரூ.45.36 கோடியில் 243 குடியிருப்புகளும் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. தமிழ்நாடு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டினார்.

விழாவில் அமைச்சர் பேசும்போது, "புதிய குடியிருப்புகளில் பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை, கழிப்பறை ஆகியவை அமைக்கப்பட உள்ளது. சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவு நீரேற்று வசதி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஆகிய வசதிகளுக்கும் ஏற்படுத்தப்படுகிறது. இந்த குடியிருப்புகள் ஏற்கனவே இருந்த குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். மீதமுள்ள குடியிருப்புகள் பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கு வழங்கப்படும். 1½ ஆண்டுகளில் பணிகளை நிறைவு செய்து வீடுகள் ஒப்படைக்கப்படும்"என்றார்.

விழாவில் கலாநிதி வீராசாமி எம்.பி., தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story