உலக நன்மைக்காக 51 நாட்கள் தொடர் கோ பூஜை


உலக நன்மைக்காக 51 நாட்கள் தொடர் கோ பூஜை
x

பெரம்பலூர் பிரம்மரிஷி மலையில் உலக நன்மைக்காக 51 நாட்கள் தொடர் கோ பூஜை நடைபெற்று வருகிறது.

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் காகன்னை ஈஸ்வரர் கோவிலில் உலக மக்கள் நலன் கருதியும், இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காக்கவும், விவசாயம் செழிக்கவும், மனிதர்களிடம் ஜீவகாருண்ய சிந்தனையும், தர்ம சிந்தனையும் ஓங்கவும், மீண்டும் இந்த பூலோகத்திலே சித்தர்களின் அருளாசி மலரவும் வேண்டியும் 51 நாட்கள் தொடர் கோ பூஜை தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு பிரம்மரிஷி மலை ரோகிணி மாதாஜி, இலங்கை ராதா சின்னசாமி மாதாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளம் தவயோகிகள் சுந்தரமகாலிங்கம், தவசிநாதன் ஆகியோர் கோபூஜையை தொடங்கி வைத்தனர். இதில் சேலம் ஜோதிடவியல் நிபுணர் செங்கமல் திட்டக்குடியை சேர்ந்த அருந்ததி, கோபூஜை குழுவினர் மற்றும் பெரம்பலூர்-எளம்பலூர் ஆன்மிக மெய்யன்பர்கள் கலந்து கொண்டனர். விழாவில் சாதுக்கள் மற்றும் சிவனடியார்கள், முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story