11-ம் தேதி 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது - செந்தில் பாலாஜி


11-ம் தேதி 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது - செந்தில் பாலாஜி
x

கரூரில் வருகிற 11-ந் தேதி 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

சென்னை,

கரூரில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:-

தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதி, சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை நிறைவேற்றும் வகையில் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்படுகிறது.

பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது. 4 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமாக விவசாயிகள் பதிவு செய்திருந்து காத்திருந்தனர்.

அதில், முதல் ஆண்டில் 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 11-ந் தேதி 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது. கரூர் மாவட்டம் அரவகுறிச்சியில் உள்ள தடாகம் பகுதியல் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது.

கரூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் நாமக்கல், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 20 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பிற்கான ஆணைகள் வழங்கப்படும்.

பதிவு செய்யப்பட்டு காத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் படிப்படியாக இலவச மின் இணைப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story