அரவைக்காக 50 ஆயிரம் நெல் மூட்டைகள்
அரவைக்காக 50 ஆயிரம் நெல் மூட்டைகள்
மயிலாடுதுறை
சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 25 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து விசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட சன்னரக நெல்மூட்டைகள் அரவைக்காக சரக்கு ெரயில் மூலம் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொண்ட 50 ஆயிரம் நெல் மூட்டைகள் 110 லாரிகள் மூலம் சீர்காழி ெரயில் நிலையம் கொண்டு வரப்பட்டது. பி்ன்னர் 58 சரக்கு ரெயில் பெட்டிகளில் ஏற்றப்பட்டு நாகை முதுநிலை மண்டல மேலாளர் ஆணைக்கிணங்க தர ஆய்வாளர் ராஜேந்திரன் மூலம் ஈரோடு மண்டலத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
Related Tags :
Next Story