ராமேசுவரத்தில் 50 மீட்டர் உள்வாங்கிய கடல்


ராமேசுவரத்தில் 50 மீட்டர் உள்வாங்கிய கடல்
x
தினத்தந்தி 8 Sept 2023 5:46 AM (Updated: 8 Sept 2023 5:52 AM)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் 50 மீட்டர் வரை கடல் உள்வாங்கியது.

ராமேசுவரம்,

தமிழகத்தில் தென்கடல் பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து சூறைக்காற்று வீசி வருகிறது. குறிப்பாக ராமநாதபுரம் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் தங்கள் படகுகளின் பாதுகாப்பு கருதி துறைமுகங்களில் நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 50 மீட்டர் வரை கடல் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் கரையோர பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் மணலில் சிக்கிக்கொண்டன. இதனை மீட்க முடியாத நிலையில் மீனவர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

கடல் நீர்மட்டம் உயர்ந்தவுடன் தான் படகை மீட்க முடியும் என மீனவர்கள் தெரிவித்தனர். இதேபோல் தனுஷ்கோடியில் இன்று வழக்கத்தை விட கடல், சீற்றமாக காணப்பட்டது. சூறாவளி காற்று காரணமாக அரிச்சல்முனை-தனுஷ்கோடி சாலையை மணல் மூடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.


Next Story