தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை


தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்.

காரியாபட்டி பகுதியை சேர்ந்தவர் கோபால் (வயது 26). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 24.6.2021 அன்று 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபாலை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோபாலுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என பரிந்துரை செய்தார்.



Related Tags :
Next Story