திருமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு 5 பெண்கள் தீக்குளிக்க முயற்சி


திருமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு 5 பெண்கள் தீக்குளிக்க முயற்சி
x

திருமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு 5 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை

திருமங்கலம்,

நிலப்பிரச்சினை

திருமங்கலம் தாலுகா கிண்ணிமங்கலத்தை அடுத்த பூவரசன்பட்டியை சேர்ந்தவர் லட்சுமி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த பாப்பு என்பவரிடம் கடந்த 1986-ம் ஆண்டு 36 சென்ட் இடம் வாங்கியுள்ளார். அதில் மல்லிகை தோட்டம் வைத்துள்ளார். மேலும் அதில் அரசு வழங்கும் இலவச மின்சாரமும் பெற்று விவசாயம் செய்து வருகிறார்.

இந்நிலையில் பாப்பு என்பவரின் மகன் ஜெயக்குமார் அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது எனக் கூறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் செய்தார்.அதன் அடிப்படையில் அந்த இடம் ஜெயக்குமாருக்கு சொந்தமானது என வருவாய்த் துறையினர் உத்தரவிட்டனர்.

5 பெண்கள் தீக்குளிக்க முயற்சி

இது தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் இருக்கும் போது இந்த உத்தரவை வழங்கியதால் லட்சுமி அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து திருமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு லட்சுமி(வயது 70), அவரது மகள் பாண்டியம்மாள் (48), மருமகள் பிரேமா (35), பேத்திகள் 2 பேர் தங்கள் உடலில் டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். இது குறித்து திருமங்கலம் நகர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். வட்டாட்சியர் அலுவலக வாயில் முன்பு 5 பெண்கள் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் திருமங்கலம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story