சங்கராபுரம் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
சங்கராபுரம் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனா்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அடுத்த வடசிறுவள்ளூர் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக சங்கராபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி தலைமையிலான போலீசார் வட சிறுவள்ளூர் ஏரிக்கரை பகுதியில் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகே பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த 5 பேர் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து போலீசார் விரட்டிச்சென்று 5 பேரையும் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 27), முருகன் (40), தேவபாண்டலத்தை சேர்ந்த கிருஷ்ணன் (29), சங்கராபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் (48), முத்துசாமி (60) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து கார்த்திக் உள்பட 5 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 200 ரூபாயை பறிமுதல் செய்தனர்.