சாராயம் விற்ற பெண்கள் உள்பட 5 பேர் கைது


சாராயம் விற்ற பெண்கள் உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 29 Dec 2022 6:45 PM GMT (Updated: 30 Dec 2022 7:44 AM GMT)

கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற 2 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற 2 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாகன சோதனை

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் போலீசார் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி கீழ்வேளூர் அருகே பெருங்கடம்பனூர், கோவில் கடம்பனூர், சிக்கல் ஆகிய பகுதியில் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

5 பேர் கைது

அப்போது பெருங்கடம்பனூர் காலனி தெருவில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி சாந்தி (வயது 55), கோவில் கடம்பனூர் மெயின் ரோட்டில் சாராயம் விற்ற காரியமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்த பழனிவேல் மகன் கனகராஜ் (40), சிக்கல் அய்யனார் கோவில் தெருவில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த பாலுச்சாமி மகன் செங்கோட்டையன் (34) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் சிக்கல் ெரயில்வே கேட் அருகே சாராயம் விற்ற நாகை வெளிப்பாளையம், நல்லியான் தோட்டம் சின்னசாமி மனைவி லதா (55), சங்கமங்கலம் பழையனூர் மேல்பாதியில் சாராயம் விற்ற திருப்பூண்டி காரைநகர் பெரியாச்சி கோவில் தெருவை சேர்ந்த முரளிதரன் மகன் சித்திரவேல் (21) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.


Next Story