கிராவல் மண் அள்ளிய 5 பேர் கைது:பொக்லைன் எந்திரங்கள், லாரி பறிமுதல்


கிராவல் மண் அள்ளிய 5 பேர் கைது:பொக்லைன் எந்திரங்கள், லாரி பறிமுதல்
x
தினத்தந்தி 15 Feb 2023 12:15 AM IST (Updated: 15 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேவதானப்பட்டி பகுதியில் கிராவல் மண் அள்ளிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

தேவதானப்பட்டியில் கிராவல் மண் அள்ளிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேவதானப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல் மணிகண்டன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவதானப்பட்டி பைபாஸ் சாலை அருகே உள்ள நிலத்தில் சிலர் பொக்லைன் எந்திரங்கள் மூலம் லாரியில் கிராவல் மண் அள்ளி கொண்டிருந்தனர். போலீசார் வருவதை கண்டதும் அவர்கள் தப்பி ஓடினர். அதில் 3 பேர் தப்பி ஓடி விட்டனர். 5 பேர் மட்டும் சிக்கினர் இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் போடியை சேர்ந்த பாலமுருகன் (வயது 35), புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடியை சேர்ந்த சுதாகர் (35), ஆண்டிப்பட்டி ஸ்ரீரங்காபுரத்தை சேர்ந்த ஈஸ்வரன் (29), திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள வெறியப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த சின்னச்சாமி (33), தேனி அல்லிநகரத்தை சேர்ந்த கண்ணன் (33) என்பதும், அனுமதியின்றி மண் அள்ளியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மண் அள்ள பயன்படுத்திய பொக்லைன் எந்திரங்கள் மற்றும் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story