புதிதாக 5 மாணவர்கள் சேர்ந்ததால் மீண்டும் அரசு பள்ளி திறப்பு
ேதுபாவாசத்திரம் அருகே மூடுவிழா கண்ட நிலையில் புதிதாக 5 மாணவர்கள் சேர்ந்ததால் மீண்டும் அரசு பள்ளி திறக்கப்படடது.
சேதுபாவாசத்திரம்:
சேதுபாவாசத்திரம் அருேக முடுவிழா கண்ட நிலையில் புதிதாக 5 மாணவர்கள் சேர்ந்ததால் அரசு பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம், சேதுபாவாசத்திரம் யூனியனுக்கு உட்பட்ட பகுதியில், விளக்கு வெட்டிக்காடு கிராமம் உள்ளது. இந்த ்கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த ஆண்டு மாணவர்கள் யாரும் சேரவில்லை. இதனால் அந்த பள்ளி மூடப்பட்டது.
இதையடுத்து, பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் திராவிட செல்வம், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், ஆசிரியர்கள் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மூடப்பட்ட பள்ளி மீண்டும் திறப்பு
தொடர் முயற்சியின் காரணமாக, ஏற்கனவே தனியார் பள்ளியில் படித்து வந்த 2 மாணவர்கள் உள்பட புதிதாக 5 மாணவர்கள் பள்ளியில் சேர்ந்தனர். இதனால், மூடப்பட்ட பள்ளி நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. புதியதாக சேர்ந்த மாணவர்களுக்கு புத்தகம், நோட்டு, பை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் வட்டார கல்வி அலுவலர்கள் மீனா சுந்தரி, சிவசாமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் காளிமுத்து, இல்லம் தேடி கல்வி மைய ஆசிரியர் அபி, வட்டார வள மையம் மேற்பார்வையாளர் கென்னடி, ஊர் பிரமுகர் கண்ணன், சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை ஆசிரியர் பரிமளா(பொறுப்பு) வகுப்புகளை தொடங்கி வைத்து நன்றி கூறினார்.