தக்கலை அருகே ஆலயத்தில் உண்டியல் பணத்தை திருடியவருக்கு 5 மாதம் சிறை
தக்கலை அருகே ஆலயத்தில் உண்டியல் பணத்தை திருடியவருக்கு 5 மாதம் சிறை தண்டனை விதித்து பத்மநாபபுரம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
தக்கலை:
தக்கலை அருகே ஆலயத்தில் உண்டியல் பணத்தை திருடியவருக்கு 5 மாதம் சிறை தண்டனை விதித்து பத்மநாபபுரம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
ஆலயத்தில் திருட்டு
தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோட்டில் புனித தோமையார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 17-1-2022 அன்று இரவு புகுந்த மர்மநபர் உண்டியலை உடைத்து, அதில் இருந்த ரூ.2,250-ஐ திருடி சென்று விட்டார். இதுபற்றி ஆலயத்தின் பங்குதந்தை அஜின்கோழி ஜாண் தக்கலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக கண்காணிப்பு கேமரா பதிவின் அடிப்படையில் மேக்காமண்டபத்தை சேர்ந்த பெனான்ஸ் (வயது 54) என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு பத்மநாபபுரம் கோர்ட்டில் நடந்து வந்தது.
5 மாதம் சிறை
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரவின் ஜீவா நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் பெனான்சுக்கு 159 நாட்கள் (5 மாதம்) ஜெயில் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியுள்ளார்.