ஏரியூர் அருகே அரசு பஸ் டயர் வெடித்து 5 பேர் காயம்
ஏரியூர் அருகே அரசு பஸ் டயர் வெடித்து 5 பேர் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏரியூர்,
சிவகங்கை மாவட்டம் ஏரியூரில் இருந்து மேச்சேரி நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் பூச்சூர் என்ற இடத்தில் வந்த போது பஸ்சின் பின்பக்க டயர் வெடித்தது.
இதில் பஸ்சில் இருந்த 5 பயணிகள் காயம் அடைந்தனர். இவர்களை சக பயணிகள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஏரியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அரசு பஸ் டயர் வெடித்து 5 பேர் காயம் அடைந்த சம்பவம் ஏரியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story