பாம்பு கடித்து 5 ஆடுகள் சாவு
கீரைசாத்து கிராமத்தில் பாம்பு கடித்து 5 ஆடுகள் பலியாகின.
காட்பாடி தாலுகா பொன்னையை அடுத்த கீரைசாத்து கிராமத்தை சேர்ந்தவர் ராமு. ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் வீட்டிலிருந்து 10 ஆடுகள் மற்றும் நான்கு மாடுகளை மேய்ப்பதற்காக கீரைசாத்து ஏரிக்கரை பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு ஓட்டிச் சென்றுள்ளார். இதில் 8 மாத சினை மாடும் இருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக 5 ஆடுகள் பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தது. இதனை கண்ட ராமு அதிர்ச்சியில் கீரைசாத்து கிராமநிர்வாக அலுவலர் யோகேஷ்க்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் விஷப்பாம்பு கடித்து ஆடுகள் இறந்கது தெரிய வந்தது.
மேலும் 8 மாத சினை மாடும் பாம்பு கடித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. இதனை அடுத்து பொன்னை கால்நடை மருத்துவர் வினோத்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவரது தலைமையில் மேல்பாடி கால்நடை மருத்துவர் ஜீவன்யா உள்ளிட்ட காலநடைத்துறை அலுவலர்கள் விரைந்து வந்து உயிரிழந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்தனர்.
பாம்பு கடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சினை பசுவிற்கு சிகிச்சை மேற்கொண்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் பசுவுக்கு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.