மின்சாரம் தாக்கி 5 மாடுகள் சாவு


மின்சாரம் தாக்கி 5 மாடுகள் சாவு
x

ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி 5 மாடுகள் உயிரிழந்தன.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பெரியவரிகம் பகுதியில் சக்கரவர்த்தி என்பவருக்கு சொந்தமான 2 பசுமாடுகள், ஒரு காளை மாடு, ஒரு கன்று குட்டியும், சிகாமணி என்பவருக்கு சொந்தமான பசு மாடு ஒன்றும் நேற்று மேய்ச்சலுக்காக அதே பகுதியில் உள்ள ஒருவரது நிலத்தில் விடப்பட்டிருந்தது. அப்போது அந்த நிலத்தில் மின்சார கம்பி ஒன்று அறுந்து விழுந்துள்ளது. அதன் மீது மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் மிதித்துள்ளது.

இதில் மின்சாரம் பாய்ந்து 5 மாடுகளும் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தன. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாடுகளின் உரிமையாளர்கள் உடனடியாக மின்சார துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் தகவலறிந்து வந்த ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. வில்வநாதன் நேரில் பார்வையிட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story