குப்பை சேகரிப்பதற்காக 5 பேட்டரி வாகனங்கள்


குப்பை சேகரிப்பதற்காக 5 பேட்டரி வாகனங்கள்
x
தினத்தந்தி 23 Sept 2023 1:00 AM IST (Updated: 23 Sept 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாநகராட்சிக்கு குப்பை சேகரிப்பதற்காக 5 பேட்டரி வாகனங்களை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகராட்சி பொது சுகாதார பிரிவுக்கு வீடுகள்தோறும் குப்பைகள் சேகரிக்க ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 5 பேட்டரி வாகனங்கள் மற்றும் சாலையில் மண் அகற்றும் கருவிகள், மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை பெறுவதற்காக 600 பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் இ.பெரியசாமி கலந்துகொண்டு, குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் மாநகராட்சி மூலம் பணியாளர்களுக்கு சேமநல நிதிக்கான வட்டித்தொகையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மேயர் இளமதி, துணைமேயர் ராஜப்பா, மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, பொது சுகாதார பிரிவு மாநகர் நல அலுவலர் செபஸ்டின், வர்த்தகர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் பொன்முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story