ரூ.19 லட்சம் முந்திரிகாய்கள் திருடிய வழக்கில் 5 பேர் கைது


ரூ.19 லட்சம் முந்திரிகாய்கள் திருடிய வழக்கில் 5 பேர் கைது
x
தினத்தந்தி 18 Jun 2023 12:15 AM IST (Updated: 18 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே ரூ.19 லட்சம் முந்திரிகாய்கள் திருடிய வழக்கில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி

கேரள மாநிலம் ஆழப்புழாவை சேர்ந்தவர் சாஜீத் (வயது46). இவர் கேரளாவில் முந்திரி கம்பெனி வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து கப்பல் மூலம் இறக்குமதியான ரூ.19 லட்சம் மதிப்பிலான முந்திரிகாய்களை தூத்துக்குடியில் இருந்து எடுத்து கன்டெய்னர் லாரியில் கேரளாவுக்கு கொண்டு செல்லும் போது லாரியின் டிரைவர் நெல்லை அடுத்த மூன்றடைப்பு, அருகே ஓய்வு எடுத்து கொண்டிருந்தார்.

அப்போது சிலர், டிரைவரை ஆயுதத்தை காட்டி மிரட்டி, கை கால்களை கட்டி போட்டி முந்திரிக்காய்களை வேறு வாகனத்தில் ஏற்றிச் திருடிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு ஐகோர்ட்டு உத்தரவுபடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், தென்காசி ஆசாத் நகரை சேர்ந்த சுரேஷ் (வயது 36), நன்னகரத்தை சேர்ந்த முருகேஷ் (39), உசேன் (33), சேர்ந்தமரத்தை சேர்ந்த அமிர்தகனி (55) மற்றும் சாம்பவர் வடகரையை சேர்ந்த பிள்ளை பெருமாள் (60) ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.


Next Story