சாராயம் கடத்தி வந்த 5 பேர் கைது
நாகூர் அருகே சாராயம் கடத்தி வந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். 330 லிட்டர் சாராயம், 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாகூர் அருகே சாராயம் கடத்தி வந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். 330 லிட்டர் சாராயம், 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வாகன சோதனை
நாகை மாவட்டத்தில் சாராய கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார். அதன்படி துணை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளார். இதையடுத்து நாகை மாவட்டத்தில் சாராய கடத்தலை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
5 பேர் பிடிபட்டனர்
இந்த நிலையில் நேற்று காலை நாகூர் - திட்டச்சேரி சாலை பனங்குடி அருகே நாகூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டு கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக 3 மோட்டார் சைக்கிள்களில் சாராயம் கடத்தி வந்த 5 பேரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். விசாரணையில் அவர் நாகை செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் மகன் விஜி (வயது24), அனிபா மகன் அசாருதீன் (22), முருகன் மகன் மாரியப்பன் (33), வெளிப்பாளையம் தாமரைகுளம் தென்கரையை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கொடிவீரன் (23), கீழ்வேளூர் மேலத்தெருவை சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தங்கபாண்டியன் (38) ஆகியோர் என்பது தெரிய வந்தது.
பறிமுதல்
இது குறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் கடத்தி வந்த 330 லிட்டர் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் விஜி, அசாருதீன், மாரியப்பன், கொடிவீரன், தங்கபாண்டியன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.