ஆயுதங்களுடன் 5 கொள்ளையர்கள் கைது; 108 பவுன் நகைகள் பறிமுதல்


ஆயுதங்களுடன் 5 கொள்ளையர்கள்  கைது; 108 பவுன் நகைகள் பறிமுதல்
x

திருச்சி அருகே ஆயுதங்களுடன் 5 கொள்ளையர்கள் ைகது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 108 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி

கொள்ளிடம் டோல்கேட், ஆக.9-

திருச்சி அருகே ஆயுதங்களுடன் 5 கொள்ளையர்கள் ைகது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 108 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ரோந்து பணி

திருச்சி நெ.1 டோல்கேட் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக நள்ளிரவு நேரங்களில் பல்வேறு வீடுகளில் கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இதனால் கொள்ளிடம் போலீசார் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தினர்

. இந்நிலையில் போலீஸ்காரர் அசோக் பட்டத்தம்மாள் தெரு பகுதியில் மோட்டார்சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ெரயில்வே மேம்பாலம் அருகே காட்டு பகுதியில் நின்றிருந்த 4 பேரிடம் விசாரணை நடத்தினார். அப்போது, அவர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்தோம். இயற்கை உபாதை கழிக்க வந்து இருப்பதாக தெரிவித்தனர்.

பயங்கர ஆயுதம்

ஆனால் அவர்கள் கையில் இரும்பு கம்பி, திருப்புலி மற்றும் கையுறை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததை கவனித்த போலீஸ்காரர் அசோக், அவர்களை பிடித்தால் தன்னை தாக்கி விடுவார்கள் என எண்ணி 4 பேரிடமும் சாதுர்யமாக பேசி வெளிச்சம் நிறைந்த பகுதிக்கு அழைத்து வந்தார். பின்னர் இதுகுறித்து மற்ற இரவுநேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் விரைந்து வந்து 4 பேரையும் மடக்கி பிடித்து அவர்களிடம் இருந்த ஆயுதங்களை கைப்பற்றினர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி பெரிய மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிச்சமுத்து மகன் கவுதம்பிரபு (வயது 27), பனமரத்துப்பட்டி தாலுகா, காந்தி நகர் 3-வது தெருவை சேர்ந்த பூபதி மகன் ஹரிஹரன் (19), கொண்டாலம்பட்டி, அழகுநகரை சேர்ந்த சின்னத்தம்பி மகன் விஜயகுமார் (20), நாமக்கல் மாவட்டம், மாணிக்கம்பாளையம் தாலுகா, சேருகலை பகுதியை சேர்ந்த அப்புசாமி மகன் பாலமுருகன் (32) என்றும், இவர்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

கைது

மேலும் அவர்கள் பிச்சாண்டார்கோவில் ெரயில்நிலையம் அருகே இருந்த ஒரு வீட்டில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்ற தயார் நிலையில் இருந்தபோது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது. இதுகுறித்து 4 பேரின் மீது வழக்குப்பதிவு செய்த கொள்ளிடம் போலீசார் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து தனித்தனியாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஈரோடு, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொள்ளையடித்த சம்பவங்கள் குறித்து வாக்குமூலம் அளித்தனர். பின்னர் போலீசார் அந்த 4 பேரையும் கைது செய்து அவர்கள் பதுக்கி வைத்து இருந்த திருட்டு நகைகள் 108 பவுனை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கொள்ளையில் தொடர்புடைய நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே பூலாங்காட்டூர் பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் கனகராஜ் (33) என்பவரையும் கைது செய்தனர்.


Next Story