திருவள்ளூர் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 4,783 மாணவிகள் பயன் அடைந்தனர் - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 4,783 மாணவிகள் பயன் அடைந்ததுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாக 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று தற்போது உயர் கல்விப் பயிலும் மாணவிகளுக்கு மாதம் தலா ரூ.1000 அவர்களின் வங்கி கணக்குக்கு நேரடியாக அனுப்பப்பட்டு வருகிறது. அந்தவகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தில் முதற்கட்டமாக 3 ஆயிரத்து 310 மாணவிகளுக்கு ரூ.2 கோடியே 31 லட்சத்து 70 ஆயிரம் நிதி வழங்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக 1,473 மாணவிகளுக்கு ரூ.14 லட்சத்து 73 ஆயிரம் நிதி வழங்கப்பட்டுள்ளது. இ்ந்த திட்டத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 783 மாணவிகளுக்கு ரூ.2 கோடியே 46 லட்சத்து 43 ஆயிரம் நிதி தமிழக அரசால் சமூக நலத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story