தமிழகம் முழுவதும் 3 மாதங்களில் 40 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் - தமிழக காவல்துறை அதிரடி
கடந்த 3 மாதங்களில் குட்கா பொருட்கள் விற்பனை தொடர்பாக 5,006 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னை,
குட்கா, பான் மசாலா மற்றும் இதர புகையிலை பொருட்களின் விற்பனையை தமிழக அரசு தடை செய்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில், இந்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு காவல்துறை தலைமை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கையில், தமிழகம் முழுவதும் கடந்த 3 மாதங்களில் 40 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குட்கா பொருட்கள் விற்பனை தொடர்பாக 5,006 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 3 மாதங்களில் 2,997 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, ரூ.7.26 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story