ஆர்.கே. பேட்டை அருகே ரூ.38 லட்சம் இரும்பு பொருட்களை கடத்தி விற்ற 4 பேர் கைது - மேலும் ஒருவருக்கு வலை வீச்சு


ஆர்.கே. பேட்டை அருகே ரூ.38 லட்சம் இரும்பு பொருட்களை கடத்தி விற்ற 4 பேர் கைது - மேலும் ஒருவருக்கு வலை வீச்சு
x

ஆர்.கே. பேட்டை அருகே ரூ.38 லட்சம் இரும்பு பொருட்களை கடத்தி விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர்

கோயம்புத்தூரில் இருந்து 6 டன் இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி ஆந்திர மாநிலம் கூடூருக்கு சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை ஆர்.கே. பேட்டை அருகே மோகினிபுரம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 25) என்பவர் ஓட்டி வந்தார். இவருக்கும் விருதுநகரை சேர்ந்த அமிர்தராஜ் (32) என்பவருக்கும் பழக்கம் இருந்தது. அமிர்தராஜ் தனது நண்பர்கள் பிரித்திவிராஜ் (34) மற்றும் பாலாஜி (37) மேலும் ஒருவருடன் என 5 போர் சேர்ந்து கோயம்புத்தூரில் இருந்து வந்த இரும்பு பொருட்களை திருடி செல்ல திட்டமிட்டனர்.

இதன்படி திருத்தணியை சேர்ந்த இரும்பு வியாபாரி ரத்தினம் (51) என்பவருக்கு சொந்தமான லாரியை கொண்டு வந்து கோயம்புத்தூரில் இருந்து வந்த லாரியில் இருந்த ரூ.38 லட்சம் மதிப்புள்ள இரும்பு பொருட்களை இந்த லாரியில் ஏற்றிக்கொண்டு சென்னைக்கு கொண்டு சென்று அங்குள்ள பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் கடையில் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இரும்பு பொருட்களை ஏற்றி அனுப்பிய நிறுவனத்தை சேர்ந்தவர்கள் ஆர்.கே. பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் சுரேஷ் அவரது நண்பர்கள் பிருத்திவி ராஜ், பாலாஜி, அமிர்தராஜ் ஆகிய 4 பேரயைும் கைது செய்து திருத்தணி சிறையில் அடைத்தனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியின் உரிமையாளர் திருத்தணியைச் சேர்ந்த ரத்தினம் ஏற்கனவே கம்பி திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு அரக்கோணம் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த கடத்தலில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story