ராஜீவ் கொலையில் விடுதலையான 4 பேர் பாஸ்போர்ட் வந்ததும் வெளிநாடு செல்லலாம்-சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தகவல்


ராஜீவ் கொலையில் விடுதலையான 4 பேர் பாஸ்போர்ட் வந்ததும் வெளிநாடு செல்லலாம்-சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தகவல்
x

ராஜீவ் கொலையில் விடுதலையான 4 பேர் பாஸ்போர்ட் வந்ததும் வெளிநாடு செல்லலாம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறுகையில், ''ஆன்லைன் சூதாட்டம் தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ராஜீவ் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 4 பேர் இந்திய பாஸ்போர்ட் வைத்துக்கொள்ளவில்லை. அயல்நாட்டு குடியுரிமை பெற்றவர்கள். கோர்ட்டு விடுதலை செய்தாலும், முறையான விசா, பாஸ்போர்ட் வாங்கித்தான் அவர்கள் வெளியே செல்ல முடியும். அதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து நாமும் உதவி புரிய முடியும். அவர்களை திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்க வேறு எந்த காரணமும் கிடையாது. பாஸ்போர்ட் வந்ததும் அவர்கள் வெளிநாடு செல்லலாம். அங்கு அவர்களுக்கு ஆபத்து இருப்பதாக எண்ணினால் போகாமலும் இருக்கலாம்'' என்றார்.


Next Story