டெல்லியில் மோசமான வானிலையால் 4 விமானங்கள் ரத்து; 11 விமானங்கள் காலதாமதம்; சென்னையில் பயணிகள் கடும் அவதி


டெல்லியில் மோசமான வானிலையால் 4 விமானங்கள் ரத்து; 11 விமானங்கள் காலதாமதம்; சென்னையில் பயணிகள் கடும் அவதி
x

டெல்லி உள்பட வடமாநிலங்களில் பலத்த மழை பெய்து வருவதால் மோசமான வானிலையால் சென்னையில் இருந்து டெல்லி மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு நேற்று மாலை 3.10 மணிக்கு செல்ல வேண்டிய விமானம், மாலை 5.15 மணிக்கு செல்ல வேண்டிய விமானம், அதேபோல் டெல்லியில் இருந்து மாலை 4 மணிக்கும், நள்ளிரவு 12.15 மணிக்கும் சென்னை வரவேண்டிய விமானம் என 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

டெல்லியில் இருந்து சென்னை வரும் 5 விமானங்களும், சென்னையில் இருந்து டெல்லி செல்லும் 6 விமானங்களும் சுமார் 3 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டன.

இதுபற்றி சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு முறையான அறிவிப்புகள் செய்யப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானாா்கள்.


Next Story