பிறந்து 4 நாட்களே ஆன பெண்சிசு சாலையோரம் வீச்சு


பிறந்து 4 நாட்களே ஆன பெண்சிசு சாலையோரம் வீச்சு
x
தினத்தந்தி 8 Jun 2023 12:30 AM IST (Updated: 8 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் அருகே பிறந்து 4 நாட்களே ஆன பெண்சிசு சாலையோரம் வீசப்பட்டு கிடந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே பிறந்து 4 நாட்களே ஆன பெண்சிசு சாலையோரம் வீசப்பட்டு கிடந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்சிசு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் சாலையோரம், பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் பெண்சிசு வீசப்பட்டு கிடந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக 108 ஆம்புலன்சுக்கும், சின்னக்கோவிலாங்குளம் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து பெண்சிசுவை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பெண்சிசுவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

போலீசார் விசாரணை

மேலும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, பெண்சிசுவை சாலையோரம் வீசிச் சென்றவர்கள் யார்? எதற்காக வீசிச்சென்றனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



Next Story