கஞ்சா விற்ற 4 பேர் கைது
களக்காட்டில் கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி
களக்காடு:
களக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் குடில்தெரு பாலம் அருகே ரோந்து சென்றனர். அப்போது 4 பேர் சிறுவர்களுக்கு ஏதோ விற்பனை செய்து கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் சிறுவர்கள் மற்றும் 4 பேரும் தப்பி ஓடினர். போலீசார் விரட்டி சென்று 4 பேரையும் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் களக்காடு தெப்பக்குளத் தெருவை சேர்ந்த முருகன் மகன் கொம்பையா (22), ரோஸ்மியாபுரத்தை சேர்ந்த கோபி மகன் இசக்கிமுத்து (32) மற்றும் 2 சிறுவர்கள் என்பதும், அவர்கள் சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story