கஞ்சா விற்ற 4 பேர் கைது
திசையன்விளையில் கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி
திசையன்விளை:
திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயலெட்சுமி மற்றும் போலீசார் நேற்று திசையன்விளை பஸ்நிலைய பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பஸ் நிலையத்தில் உள்ள கழிவறை அருகில் மோட்டார் சைக்கிளில் வைத்து கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த சாத்தான்குளம் தாலுகா தெற்கு ராமசாமிபுரத்தை சேர்ந்த சாந்தகுமார் (வயது 23), உடன்குடி புதுமனை கோட்டைவிளையை சேர்ந்த முத்துராஜ் (வயது 19) மற்றும் 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.6,500 மதிப்பிலான கஞ்சா பொட்டலங்கள், 3 செல்போன்கள், 1 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story