திருப்பத்தூர் மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை 3,883 பேர் தேர்வு எழுதவுள்ளனர்.


திருப்பத்தூர் மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை 3,883 பேர் தேர்வு எழுதவுள்ளனர்.
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை 3,883 பேர் தேர்வு எழுதவுள்ளனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை 3,883 பேர் தேர்வு எழுதவுள்ளனர்.

குரூப்-1

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்-1 முதல்நிலை தேர்வு தமிழகம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. துணை ஆட்சியர், துணை போலீஸ் சூப்பிரண்டு, துணை பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கு இந்த தேர்வு நடைபெறுகிறது.

இதனையொட்டி திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, தனித்துணை கலெக்டர் கோவிந்தன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய பிரிவு அலுவலர் குமரேசன், உதவி பிரிவு அலுவலர் கேசவன், தாசில்தார் சிவப்பிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

3,883 பேர்

அப்போது கலெக்டர் அமர்குஷ்வாஹா பேசியதாவது:-

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-1-ல் அடங்கியுள்ள பதவிகளுக்கான போட்டித் தேர்வு இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. திருப்பத்தூர் தாலுகாவில் 14 தேர்வு மையங்களில் 3,883 பேர் தேர்வு எழுதவுள்ளனர்.

அனைத்து தேர்வு மையங்களிலும் குடிநீர், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர் அளவிலான 2 பறக்கும் படை அலுவலர்கள், துணை வட்டாட்சியர்கள், முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள், காவலர்கள், அலுவலக உதவியாளர் ஆகியோர் சேர்ந்து 5 நடமாடும் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் பணிஒபுரிய உள்ளனர். தேர்வு மையங்களில் அனைத்து நிகழ்வுகளையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும்.

தேர்வு எழுத வருபவர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் வந்திருக்க வேண்டும். தேர்வு எழுத வரும் தேர்வாளர்கள் யாரும் கைப்பேசி, டிஜிட்டல் ெகடிகாரம், ஸ்மார்ட் ெகடிகாரம் போன்றவற்றை தேர்வு மையத்திற்குள் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story