36-வது கொரோனா தடுப்பூசி முகாம்: 12 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்
தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற 36-வது கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் 12.62 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
சென்னை:
தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக கொரோனா தடுப்பூசி போடுவதற்காக மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்திக் இதுவரை 35 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. இதுவரை நடைபெற்ற 35 மெகா தடுப்பூசி முகாம்களில் 5 கோடியே 22 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 36-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.
இதில் 12 வயதிற்கு மேற்பட்ட 12 லட்சத்து 62 ஆயிரத்து 89 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் 61 ஆயிரத்து 202 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 2 லட்சத்து 98 ஆயிரத்து 634 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும், 9 லட்சத்து 2 ஆயிரத்து 253 பேருக்கு முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.
தமிழகத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டோரில் 96.49 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும் 91.09% பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தி கொண்டனர்.
மேலும் தமிழகத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு முகாமை முன்னிட்டு நாளை (திங்கள்கிழமை) தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.