36-வது நினைவு தினம்: எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். சிலை, உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
சென்னை,
அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 36-வது ஆண்டு நினைவு தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். சிலை, உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், எம்.ஜி.ஆர் நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து, எம்.ஜி.ஆர். நினைவிட நுழைவு வாயில் அருகே எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
Related Tags :
Next Story