மகாசக்தி மாரியம்மன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு 34-ம் ஆண்டு பால்குட திருவிழா


மகாசக்தி மாரியம்மன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு 34-ம் ஆண்டு பால்குட திருவிழா
x

மகாசக்தி மாரியம்மன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு 34-ம் ஆண்டு பால்குட திருவிழா நடைபெற்றது.

அரியலூர்

வி.கைகாட்டி- அரியலூர் சாலையில் உள்ள மகாசக்தி மாரியம்மன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு 34-ம் ஆண்டு பால்குட திருவிழாநேற்று நடந்தது. இதையடுத்து காலை முட்டுவாஞ்சேரி சாலையில் அழகனேரி ஓடைப்பாலத்தில் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதைதொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி, பால்குடம் எடுத்து, காவடி மற்றும் பாடை வாகனம் உள்ளிட்டவைகளை ஊர்வலமாக மேளதாளங்கள் முழங்க எடுத்து வந்து மகாசக்தி மாரியம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் கோவில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராமமக்கள் செய்திருந்தனர்.

அதேபோல் அஸ்தினாபுரம் அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் அமைந்துள்ள 23 அடி ஸ்ரீபாலமுருகன் சிலை கோவிலில் நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று ஊர் தெருக்களைச் சுற்றி மேளதாளங்கள் முழங்க விரதமிருந்த பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வஸ்திரம் சாத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.


Next Story