கோவையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 33 மயில்கள்- வனத்துறையினர் விசாரணை


கோவையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 33 மயில்கள்- வனத்துறையினர் விசாரணை
x

கோவையில் விவசாய நிலங்களில் 33 மயில்கள் இறந்து கிடந்ததை கண்ட வனத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்

கோவை ,

கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை அருகே வதம்பசேரி எனும் பகுதி உள்ளது. இங்கு விவசாய நிலங்கள் அதிகமாக உள்ளன. எனவே வன உயிரினங்களின் நடமாட்டம் இங்கு அதிகமாக இருக்கும்.

இந்நிலையில் இங்கு உள்ள விவசாய நிலங்களில் சுமார் 33 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதில் சண்முகராஜ், ராமசாமி மற்றும் கந்தசாமி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் மயில்கள் இறந்து கிடந்தன. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் மயில்கள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், மயில்களை கைப்பற்றி, மதுக்கரை வனத்துறை அலுவலகத்திற்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story