தமிழகத்தில் 32 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்


தமிழகத்தில் 32 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
x

கோப்புப்படம் 

தமிழகத்தில் 32 போலீஸ் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் 32 போலீஸ் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே 24 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 32 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி,

  • கோவை பயங்கரவாத தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாக இருந்த வி.சசிமோகன், ஈரோடு சிறப்பு அதிரடிப்படை எஸ்.பி.யாக நியமனம்
  • திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் தேஷ்முக் ஷேகர் சஞ்சய், சென்னை ஐகோர்ட்டு வழக்குகளை கண்காணிக்கும் பிரிவு காவல் கண்காணிப்பாளர்/காவல்துறை உதவி ஆய்வாளர் ஜெனரலாக நியமனம்
  • மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி. மகேஷ்வரன், ஆவடி காவல் ஆணையரகத்தின் தலைமையகம் மற்றும் நிர்வாக துணை ஆணையராக நியமனம்
  • ஆவடி காவல் ஆணையரகத்தின் போக்குவரத்து துணை ஆணையராக இருந்த ஜெயலட்சுமி, மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி.யாக நியமனம்
  • கோவை மாவட்ட எஸ்.பி.யாக இருந்த பத்ரி நாராயணன், கோவை பயங்கரவாத தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாக நியமனம்
  • சென்னை புளியந்தோப்பு துணை ஆணையராக இருந்த ஈஸ்வரன், சென்னை ரெயில்வே எஸ்.பி.யாக நியமனம்
  • ஈரோடு சிறப்பு அதிரடிப்படை எஸ்.பி.யாக இருந்த ராஜன், திருச்சி ரெயில்வே எஸ்.பி.யாக நியமனம்,
  • சென்னை ரெயில்வே எஸ்.பி.யாக இருந்த அன்பு, ஆவடி காவல் ஆணையரகத்தின் போக்குவரத்து துணை ஆணையராக நியமனம்
  • மாநில காவல்துறை முதன்மை கட்டுப்பாட்டு அறை எஸ்.பி.யாக இருந்த வனிதா, மதுரை நகர போக்குவரத்து துணை ஆணையராக நியமனம்
  • திருப்பூர் வடக்கு சட்டம், ஒழுங்கு துணை ஆணையராக சுஜாதா நியமனம்,

மேலும் அதன் விவரம் வருமாறு:-


Next Story