திண்டிவனம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க 31-ந்தேதி கடைசி நாள்
திண்டிவனம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 31-ந்தேதி கடைசி நாளாகும் என கலெக்டா் தொிவித்துள்ளாா்.
திண்டிவனத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு 10-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த சேர்க்கையில் சேர்ந்திட கடைசி தேதி வருகிற 31-ந் தேதியாகும்.
இதற்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வரும்போது தங்களது அசல் ஆவணங்களான மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச்சான்றிதழ் மற்றும் முன்னுரிமை கோருவதற்கான சான்றிதழ் ஆகியவற்றை நேரில் கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகை மற்றும் விலையில்லா மடிக்கணினி, சைக்கிள், பாடப்புத்தகம், மூடுகாலணி, சீருடை, சீருடைக்கான தையற்கூலி, வரைபடக்கருவிகள், இலவச பஸ்-பாஸ் ஆகியவை வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கலாம்
மேலும் பயிற்சியின்போது பிரபல தொழிற்நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் ட்ரெய்னிங் உதவித்தொகையுடன் வழங்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழிற்நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும். இந்த இணையதள வழியிலான கலந்தாய்வில் கலந்துகொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 9380114610, 8072217350, 9789695190 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பக்கட்டணம் ரூ.50-ஐ விண்ணப்பதாரர் நேரடியாக செலுத்த வேண்டும்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.