31,598 பேர் குரூப்-2 தேர்வு எழுதினர்
31,598 பேர் குரூப்-2 தேர்வு எழுதினர்
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் குரூப்-2 தேர்வினை 31 ஆயிரத்து 598 பேர் எழுதினர். 5 ஆயிரத்து 293 பேர் தேர்வு எழுத வரவில்லை.
குரூப்-2 தேர்வு
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு நேற்று நடைபெற்றது.இதில் நேர்முகத்தேர்வு பதவிகளுக்கு 116 இடங்களுக்கும், நேர்முக தேர்வு அல்லாத பதவிகளுக்கு 5 ஆயிரத்து 413 இடங்களுக்கும் என மொத்தம் 5 ஆயிரத்து 529 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
5,293 பேர் தேர்வு எழுத வரவில்லை
குரூப்-2 தேர்வை எழுத மொத்தமாக 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 36 ஆயிரத்து 891 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதற்காக பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என மொத்தம் 133 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
இதில் 31 ஆயிரத்து 598 பேர் கலந்து கொண்டு தேர்வினை எழுதினர். 5 ஆயிரத்து 293 பேர் தேர்வு எழுத வரவில்லை. குரூப்-2 தேர்வு நடைபெற்றதையொட்டி மாவட்டம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கலெக்டர் பார்வையிட்டார்
தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரியில் நடந்த தேர்வினை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டார்.