தொழில்நுட்ப மையங்களில் 31 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர்-அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்


தொழில்நுட்ப மையங்களில் 31 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர்-அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்
x

தொழில்நுட்ப மையத்தை அமைச்சர் சி.வி.கணேசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்த போது எடுத்த படம்.

தனியாருடன் இணைந்து தமிழக அரசு தொடங்கியுள்ள தொழில்நுட்ப மையங்களில் 31 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர் என்று அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித் தார்.

நீலகிரி

பந்தலூர்: தனியாருடன் இணைந்து தமிழக அரசு தொடங்கி யுள்ள தொழில்நுட்ப மையங்களில் 31 ஆயிரம் மாணவர்கள் படிக்கின் றனர் என்று அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித் தார்.

தொழில்நுட்ப மையம் திறப்பு விழா

பந்தலூர் அருகே உப்பட்டி தொழிற்பயிற்சி நிலையத்தில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து ரூ.34 கோடியே 65 லட்சம் மதிப்பில் தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை

அமைச்சர் சி.வி.கணேசன் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்தார். கூடுதல் தலைமை செயலாளர் குமார் ெஜயந்த் தலைமை தாங்கினார், தொழில் பயிற்சி நிலைய முதல்வர் வெங்கட கிருஸ்ணன் முன்னிலை வகித்தார். மண்டல பயிற்சி இணை இயக்குநர் முஸ்தபா வரவேற்று பேசினார். இதற்கிடையே அமைச்சர் சி.வி.கணேசன் பேசும்போது கூறியதாவது:-

படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்

இதுபோன்ற தொழில்நுட்ப பமையங்கள் பெரிய நகரங்களில் தான் தொடங்கப்பட்டு வேலைவாய்ப்புகள் தொடங்குவது வழக்கம். ஆனால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொறுபேற்றவுடன் தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க. வேண்டும், அதற்காக அவர்களுக்கு பயிற்சிகள் அளிக்க வேண்டும் என்ற நோக்கில் தனியார் நிறுவனத்தின் சமூக பங்களிப்புடன் 2 ஆயிரத்து 877 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழைய. முறைகளை மாற்றி 71 இடங்களில் புதிய. தொழில் நுட்பத்துடன் கூடிய தொழில்நுட்ப மையங்கள் தமிழ்நாட்டில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் 7,572 மாணவர்கள்கூடுதலாக படித்து வருகின்றனர். 2 ஆண்டுகளில் 6,932 மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து 31 ஆயிரத்து 932 மாணவர்கள் படித்து வருகின்றனர். இது போன்ற திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம் வெளிநாட்டில் உள்ள மாணவர்கள் கற்கின்ற கல்வியை தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களும் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. அரசு அனைத்து உதவிகளை செய்தாலும் மாணவர்கள் படித்தால் தான் முன்னேறமுடியும். நான் முதல்வன் என்ற இணையதளம் மூலம் கல்வி தொடர்பான அனைத்து விபரங்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் அதிகமானவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்

இந்த விழாவில் கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரத்துல்லா, பொதுபணித்துறை(கட்டுமானம்) செயற்பொறியாளர்அய்யாசாமி, துணைஇயக்குநர் பீர்முகமது, தாசில்தார் கிருஸ்ணமூர்த்தி, நெல்லியாளம் நகராட்சி தலைவர் சிவகாமி, கூடலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் குமார், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story