300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 30 Jan 2023 12:15 AM IST (Updated: 30 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவுக்கு கடத்த முயன்ற 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

கேரளாவுக்கு கடத்த முயன்ற 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ரேஷன் அரிசி

பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையம், ஆனைமலை, நஞ்சேகவுண்டன்புதூர் ஆகிய பகுதிகளில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நஞ்சேகவுண்டன்புதூர் அருகே உள்ள மாரியம்மன் கோவில் பகுதியில் வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தினர். பின்னர் அதன் டிரைவரிடம் விசாரணை நடத்தியபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், ஆட்டோவில் இருந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அதில் 300 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

கைது

தொடர்ந்து நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர், பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறையை சேர்ந்த டிரைவர் வேலுசாமி(வயது 62) என்பதும், பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கேரளாவில் அதிக விலைக்கு விற்க கடத்த முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஆட்டோ மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு பெண்ணை போலீசார் வலைவீசி தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story