காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 30 பேர் படுகாயம்
கொட்டாவூர் கிராமத்தில் நடந்த காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
அணைக்கட்டு
கொட்டாவூர் கிராமத்தில் நடந்த காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூரை அடுத்த கொட்டாவூர் கிராமத்தில் காளை விடும் விழாநேற்று நடந்தது. திருப்பத்தூர் ஜோலார்பேட்டை பரதராமி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 139 காளைகள்போட்டியில் கலந்துகொள்ள வந்தன. காளைகளை கால்நடை மருத்துவர் பரிசோதனை செய்து 198 காளைகளுக்கு அனுமதி வழங்கினார்.
நிகழ்ச்சியில் துணை கலெக்டர் (சிறுபான்மை பிரிவு), அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் நந்தகுமார், ஊராட்சி மன்ற தலைவர் அமராவதி கருணாநிதி, துணை தலைவர் சசிக்குமார் விஜயன், ஒன்றிய குழு உறுப்பினர் பிரேமலதா பாபு ஆகியோர் முன்னிலையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
அதனை தொடர்ந்து காலை 10 மணிக்கு விழா தொடங்கியது. காளை மாடுகள் வாடிவாசலில் இருந்து ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன சீறிப்பாய்ந்து ஓடின.
அப்போது அவை முட்டியதில் வேடிக்கை பார்க்க வந்திருந்த 30-க்கும் க்கும் மேற்பட்ட இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்க விழாவில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
விழாவில் அதிவேகமாக ஓடி குறைந்த நேரத்தில் இலக்கையடைந்த காளையின் உரிமையாளருக்கு முதல் பரிசாக ரூ.50ஆயிரம், இரண்டாவது பரிசாக ரூ.40 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.33ஆயிரம் என 40 பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவையொட்டி வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டனர்.
============