ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் 30 கிலோ கஞ்சா சிக்கியது


ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் 30 கிலோ கஞ்சா சிக்கியது
x

கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் போலீசார் நடத்திய சோதனையில் ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் கேட்பாரற்று கிடந்த 30 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் சிக்கியது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் தமிழக-ஆந்திர எல்லை பகுதி ஆகும். இப்பகுதியில் போலீசாரின் வாகன சோதனையில், ஆந்திராவில் இருந்து வாகனங்களில் சென்னைக்கு கடத்தப்படும் கஞ்சா பொட்டலங்கள் தினமும் பிடிபடுகிறது. பலர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அதே சமயத்தில் ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூட கஞ்சா கடத்தப்படுவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதனையடுத்து நேற்று அதிகாலை ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவில் இருந்து சென்னை நோக்கி வந்தசர்கார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கும்மிடிப்பூண்டி போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர். இந்த நிலையில், ரெயில் பெட்டி ஒன்றில் கேட்டபாரற்று கிடந்த 15 பாக்கெட்டுகளில் மொத்தம் 30 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகாவை அடுத்த ஆர்.கே.பேட்டைக்கு ஆந்திராவில் இருந்து 2 கிலோ கஞ்சா கடத்தி கொண்டு வந்ததாக திருவள்ளூர் மாவட்டம் பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் (28) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story